கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பிரவீன் குமார் தனது வேலை நிமித்தமாக வெளியூருக்குச் சென்று விட்ட நிலையில், திவ்யபாரதி தனது ஒரு வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்றிரவு வீட்டிற்குள் நுழைந்து, தூங்கிக்கொண்டிருந்த திவ்யபாரதியை சரமாரியாகத் தாக்கிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, பீரோவில் இருந்த நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.