கடலூர்:வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். முதல் மனைவி செல்விக்கு குமுதா என்ற பெண்ணும், இரண்டாவது மனைவி மலர்க்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரியசாமி இறந்தநிலையில், பெரியாசாமியின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த வேல்முருகனுக்கும், முதல் மனைவிக்கு பிறந்த குமுதாவின் மகளான பவித்ராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த வேல்முருகன் கடந்த வருடம் மீண்டும், கழுதூர் வந்தவர் பெரியசாமியின் முதல் தாரத்தில் பிறந்த அக்காவின் சம்மதத்துடன், அவரது மகள் பவித்ராவை பெரம்பலூரில் கோயிலிற்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.
பவித்ரா தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வளைகாப்புக்குப் பின், அவர் அம்மா வீட்டில் இருந்துள்ளார். கடந்த அக். 28 ஆம் தேதி, மாலை வேல்முருகன் தனது மனைவியை பார்த்து வருவதாக, தனது தாயிடம் கூறிவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இரவு 11 மணியளவில் வேல்முருகனின் தாயாருக்கு, தொலைப்பேசி வாயிலாக வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடலை வேப்பூர் மருத்துவமனையில் வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கதறி அழுதனர்.
காவல்துறை வழக்கு பதிவு
பின்னர் வேல்முருகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், அதனை மறைப்பதற்காக முகம் மற்றும் மார்ப்புப் பகுதியில் குங்குமத்தை பூசி உள்ளதாகவும், உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாக கூறி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வேல்முருகனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையில், வேப்பூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கினர்.
உடற்கூறாய்வு தகவல்