கடலூர் பகுதியைச் சுற்றி சுமார் 52 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சாமியார் பேட்டை என்ற கடலோர கிராம பகுதியில் மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியது.
வானிலை குறித்து தகவல் பரிமாற்ற மிதவை உபகரணம் கண்டெடுப்பு - கடலூர் மீனவ கிராமங்கள்
கடலூர்: கடலோர பகுதியில் வானிலை குறித்து தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் மிதவை உபகரணம் கரை ஒதுங்கியது குறித்து கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Weather related communication equipment
இதுகுறித்து அப்பகுதி மீனவரான குட்டி, கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அங்கு விரைந்து வந்த கடலோர காவல்படையினர் அந்தப் பொருளைக் கைப்பற்றினர்.
கைபற்றிய பொருள் வானிலை குறித்து தகவல் பரிமாற்றம் செய்யும் மிதவை உபகரணம் என்பதும், அது கரை ஒதுங்கியிருப்பதும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.