கடலூரில் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உட்பட சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கடலூர் டவுன் ஹாலில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, நியூ சினிமா பகுதியில் நிறைவடைந்தது.
மழை நீீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி! - அவசியம்
கடலூர்: மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள்
இதில் வ. உ சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், ராய்ப்பூர் உயிரி தொழில்நுட்பத் துறை துணைச் செயலாளர் பானுமதி ஜல், சக்தி அமைச்சகம் திட்ட இயக்குனர் பிரமோத் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.