கடலூர்: விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயிலாகும். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள மணிமுக்தா ஆற்றில் நீராடி விருத்தகிரீஸ்வரரை வணங்கினால், காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தேவாரம் பாடி சென்றுள்ளனர். இத்திருக்கோயிலில் பஞ்சாட்சர முறைப்படி 5 கோபுரம், 5 கொடிமரம், 5 தீர்த்தம், 5 தேர், 5 நந்தி , 5 மண்டபம், 5 கால பூஜை என சிறப்புடையது. கடந்த 6ஆம் தேதி இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.