கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் எடையார் சாலையில் ஒருவர் மது போதையில், தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையில் நடுவே படுக்கவைத்து, அதில் கால்மீது கால்போட்டு அமர்ந்து செல்போன் பேசி கொண்டு இருந்துள்ளார்.
அப்பகுதியில் காரில் வந்தவர்கள் குடிபோதை ஆசாமி வாகனத்தை எடுப்பார் என காத்துக் கொண்டிருந்தனர். பின்னர், அவ்வழியே வந்த வாகன ஓட்டி, கார் ஓட்டுனர் இறங்கி சென்று மதுப்பிரியரை அப்புறப்படுத்தினார்.