தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடலூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் கோல்டன் ஜூப்ளி விடுதியில் 150க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனாவுடன் கபடி ஆடிய கடலூர் பாய்ஸ் இந்நிலையில், சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் அங்குள்ள விடுதியின் மேல் தளத்தில் கரோனா தொற்று குறித்த சிறிதும் அச்சம் இல்லாமல் கபடி ஆடி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் மருத்துவ நிர்வாகத்திற்கு தெரியவர, விடுதியின் மேல்தளம் இழுத்து பூட்டப்பட்டது. மேலும் இது குறித்து சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:ரேசன் கடையில் பொருள் வாங்க வீடு வீடாக டோக்கன் விநியோகம்!