கடலூர்: 'கிராமசபை மீட்புப் பயணம் 2021' என்ற தலைப்பில், தொடர்ந்து ஐந்தாவது நாள் பயணமாக இராஜேந்திரப்பட்டினம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை மீட்பு கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தடையின்றி கிராம சபை நடத்த வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கிராம சபையின் முக்கியத்துவம், அது தடைபட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், கிராமசபையைக் கூட்டியாக வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக உரையாடினர். கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், ஊராட்சி சார்ந்த தங்களது பிரச்னைகளைக் களைய, அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டிய அவசியம் குறித்த கருத்துகளை முன்வைத்தனர்.