கடலூர்:கோழிக்கூண்டிலிருந்த முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பைப் பிடிக்கும் வேளையில், அது முட்டையைக் கக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் வீட்டில் நாட்டுக் கோழி வளர்த்துவருகிறார். நேற்றிரவு கோழிக்கூண்டிலிருந்து சத்தம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது கோழிக்கூண்டுக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வனத் துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
டிக்டாக் ரசிகர்களே உஷார்... கைபேசி பயனர்களைக் குறிவைக்கும் 'டிக்டாக்' போலி செயலிகள்!
விரைந்து வந்த வனத்துறையினர் கோழிக்கூண்டுக்குள் இருந்த பாம்பின் அசைவுகளைக் கண்காணித்தனர். பின்னர் கடலூர் பாம்புபிடி வீரர் செல்லா உதவியுடன், கூண்டிலிருந்த 6 அடி நீள நல்ல பாம்பைப் பிடித்தனர்.
விழுங்கிய கோழி முட்டைகளை பாம்பு கக்கும் காட்சி நல்ல பாம்பு கூண்டிலிருந்த 13 மூட்டைகளில் 7 முட்டைகளை விழுங்கியிருந்ததால், ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்தது. பின்னர், நெளிந்துகொண்டே முழுங்கிய 7 முட்டைகளையும் வெளியே கக்கியது. இதனைத் தொடர்ந்து பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.