கடலூர் சிப்காட்டில் இயங்கிவரும் பாண்டியன் கெமிக்கல்ஸ், பயனியர் கெமிக்கல்ஸ் தொழிற்சாலைகள் தொடர்ந்து ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும், உரிய ஊதியம் தர மறுப்பதாகவும் கூறி இந்த இரண்டு தொழிற்சாலைகளையும் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தொழிற்சாலையின் அருகில் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கண்டன போராட்டம் நடைபெற்றது.
ரயில்வே துறையில் 90% வடமாநிலத்தவர்... போராட்டம் வெடிக்கும்: வேல்முருகன் ஆவேசம்! - தி. வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு
கடலூர்: ரயில்வே துறையில் 90 சதவீதம் வட மாநில தொழிலாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்யவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
velmurugan
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அண்மையில் மதுரை ரயில்வே கோட்ட பணிகளில் தேர்வு செய்யப்பட்ட 572 பேரில், 11 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. திருச்சி ரயில்வே கோட்ட பணி நியமனத்திலும் இதுவே நடந்துள்ளது. இந்த பணி நியமனத்தை ரத்து செய்து மீண்டும் தமிழர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.