கடலூர்:கடலூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வருகை தந்தார்.
அப்போது தமிழ்நாடு வேளான்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். பின்னர், இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமாவளவன் கூறியதாவது, “குஜராத்தில் மோபி என்னுமிடத்தில் தொங்குபாலம் இடிந்தது 130 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் மத்திய, மாநில அரசு இணைந்து இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற விபத்து நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கின்றது.
ஆளுநரே ஆர்.எஸ்.எஸ் தொண்டராக செயல்படுகின்றார். ஆன்மீகம் என்னும் பெயரில் ஆளுநர் மதவாதம் பேசுகின்றார். கோவையில் நடைபெற்ற விபத்தோ,அல்லது முபின் தொடர்பாக உளவுத்துறை எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை. அரசுக்கு களங்கம் விளைவிக்கவே பேசி வருகின்றனர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை எடுத்த விசாரிக்க வேண்டும்.