தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 26, 2020, 12:56 PM IST

ETV Bharat / state

ஓய்வுபெற்ற என்.எல்.சி ஊழியரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கடலூர்: நெய்வேலி என்எல்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியின் வீட்டின் முகப்பில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

unknown person thrown petrol bomb on nlc retired officers car  என்.எல்.சி ஊழியர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு  நெய்வேலி என்எல்சி ஊழியர்  ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு  நெய்வேலி செய்திகள்
ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

விருத்தாச்சலத்தையடுத்துள்ள நெய்வேலியில் வசித்துவரும் ராஜேந்திரன், என்.எல்.சி.யில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர், திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் முக்கியப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவு இரண்டு மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள், அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர்.

பெட்ரோல் குண்டு பெருத்த சத்தத்துடன் வெடித்து, கார் தீப்பற்றி எரிந்தது. இதன்பின்பு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்து பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், எரிந்துகொண்டிருந்த தீயை முழுவதுமாக அணைத்தனர்.

இதுகுறித்து நெய்வேலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ராஜேந்திரன் வீட்டின் மேல் மாடியில் தங்கியிருந்த என்.எல்.சியின் அப்ரண்டிஸ் பயிற்சி இளைஞர்களுடன், ராஜேந்திரனுக்கு முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.

அதனால், அந்த இளைஞர்கள் இந்தச் செயலை செய்திருக்கலாம் என்று காவலர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், இதற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:நமக்குள் சண்டை வரக்கூடாது: சாகித்திய அகாதமி எழுத்தாளர் ஜெயஸ்ரீ சிறப்புப் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details