கடலூர்:சிதம்பரத்தில் பரப்புரையைத் தொடங்கியவர் கடலூர் பேருந்து நிலையம் மற்றும் மஞ்சக்குப்பத்தில் மாநகராட்சியின் 45 வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, ’எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையில் நீட் ரகசியத்தைக் கூறுவதாக கூறிய உதயநிதியை காணவில்லை என்று கூறி வருகிறார். நீட் ஒழிப்பிற்கான ரகசியமே பாஜகவிற்கு அடிமையாக இல்லாமல் இருப்பது தான்.
இதனைக் கூட அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. நீட் விவகாரத்தில் அதிமுக செய்தது மிகப்பெரிய அயோக்கியத்தனம். குடியரசுத்தலைவரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா குறித்து ஓராண்டாக அறிவிக்காமல் இருந்தார்கள். நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் 14 பேர் இறந்துள்ளனர்.
இனியும் இது தொடரக்கூடாது. நீட் விலக்கு ஏற்படும் வரையில் எங்களது சட்டப்போராட்டம் தொடரும். ராகுல்காந்தி மக்களவையில் பேசும் போது திமுக இருக்கும் வரையில் தமிழ்நாட்டில் பாஜகவால் கால் வைக்க முடியாது என்று கூறினார்.
பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் திமுக சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் முன்னால் வந்து நிற்போம்.