கடலூர்: எஸ்.என்.சாவடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு. இவரை அதேப்பகுதியைச் சேர்ந்த இளங்கோ மகன் தங்கப்பாண்டியன் என்ற ஏழுமலையை முன்விரோதம் காரணமாக கொலை செய்தார். இதனால் காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏழுமலை மீது கொலைமுயற்சி, அடிதடி, கஞ்சா வழக்குகள் 10 நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
இதேப்போல், கடலூர் வட்டம் சிங்கிரிகுடியில், புதுச்சேரி மாநிலம் நோணாங்குப்பத்தைச் சேர்ந்த சிதம்பரம் மனைவி விஜயலட்சுமி என்ற சாந்தா, அவரது மகள் மாதங்கி என்ற சந்தியா ஆகியோர் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ரெட்டிச்சாவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு, புதுச்சேரி மாநிலம் நைனார்மண்டபத்தைச் சேர்ந்த ஆ.இருசப்பன் (49) என்பவரை கைது செய்தனர். இவர், ஏற்கனவே ஆதாய கொலைக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்.