தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்கா கடத்தல் - இருவர் கைது! - இரண்டு பேர் கைது

வாகன சோதனையின் போது பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவர் கைது
இருவர் கைது

By

Published : Oct 5, 2020, 2:28 AM IST

கடலூர்: காய்கறி வண்டியில் பல லட்ச ரூபாய் மதிப்புடைய குட்கா பொருள்களை கடத்தி வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லிக்குப்பம் பகுதிக்கு ஓசூரில் இருந்து காய்கறி வண்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தியதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தன் அடிப்படையில் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் அருகே காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே சென்ற காய்கறி வண்டியை மறித்து சோதனை செய்த போது வண்டியின் உள்ளே 200க்கும் மேற்பட்ட பெட்டிகளில் பல லட்ச ரூபாய் மதிப்புடைய குட்கா பொருள்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் நெல்லிக்குப்பம் காவல்துறையினர் குட்கா பொருள்கள், அதை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். வாகன ஓட்டுநரான சரவணகுமார், உடன் பயணித்த ஷெரிப் என்கிற இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு: திமுக மகளிர் அணி பேரணி

ABOUT THE AUTHOR

...view details