கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன், இவருக்கு குப்பாயி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகனான பாஸ்கரன், மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அப்பகுதி பெண்களை கேலி செய்த பாஸ்கரனை, தாய் குப்பாயி தனது இளைய மகன் பிரபாகரனோடு தட்டிக் கேட்டுள்ளார். சொல் பேச்சு கேட்காத மகன் பாஸ்கரை, தாயும், தம்பியும் (பிரபாகரன்) கட்டையால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பலத்த காயம் ஏற்பட்ட பாஸ்கரன் (31) உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்காமல், மறைக்க முயன்ற குப்பாயி, பிரபாகரனை அழைத்துச் சென்று ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் சேத்தியாதோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரம் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பலமாக தாக்கப்பட்டதால் பாஸ்கரன் உயிரிழந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் குப்பாயி, பிரபாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் போலி வைரத்தை விற்க முயன்றவர்கள் கைது!