தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐம்பொன் சிலைகளை 2 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் விற்க முயன்ற இருவர் கைது - vridhachalam

விருத்தாச்சலம் அருகே இருப்பைகுறிச்சி கிராமத்தில் இரு பழமையான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ 2 கோடி மதிப்பிலான பெருமாள் மற்றும் மாரியம்மன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஐம்பொன் சிலைகளை 2 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் விற்க முயன்ற இருவர் கைது
ஐம்பொன் சிலைகளை 2 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் விற்க முயன்ற இருவர் கைது

By

Published : Jun 25, 2022, 10:47 AM IST

கடலூர்: விருத்தாச்சலம் அருகே இருப்பைகுறிச்சி கிராமத்தில் இரு பழமையான ஐம்பொன் சிலைகளை இரண்டு கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் விற்க முயற்சிப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அந்த சிலைகளை கூடுதல் விலை கொடுத்து வாங்குவது போல் நடித்து ஒரு அடி உயரமுள்ள மாரியம்மன் சிலை, ஒன்னேகால் அடி உயரமுள்ள பெருமாள் சிலையை சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சிலைகளை விற்க முயன்ற இருப்பைகுறிச்சியை சேர்ந்த மகிமைதாஸ் மற்றும் பெரிய கோட்டை மேட்டை சேர்ந்த பச்சைமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சிலை திருட்டு தடுப்பு வழக்கை விசாரிக்கும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இவ்விரு ஐம்பொன் சிலைகளையும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: கடலூர் வெடிவிபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details