தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக அமைத்திருப்பது மக்கள் விரோத கூட்டணி - டிடிவி தினகரன் - திமுக

கடலூர்: அதிமுகவை மானங்கெட்டவர்கள் என்று கூறிய பாமகவுடன் அதிமுக வைத்துள்ள கூட்டணி மக்கள் விரோத கூட்டணி என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையின் போது விமர்சித்துள்ளார்.

அதிமுக அமைத்திருப்பது மக்கள் விரோத கூட்டணி- டிடிவி தினகரன்

By

Published : Apr 14, 2019, 11:00 PM IST


கடலூர் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் காசி.தங்கவேலை ஆதரித்து விருத்தாசலத்தில் அக்கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "எடப்பாடி அரசின் ஆட்டத்தை முடிப்பதற்கான வாய்ப்பை மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதிமுக-வை மானங்கெட்டவர்கள் என்று கூறிய பாமக-வுடன் இன்று கூட்டணி அமைத்துள்ளனர். அதிமுக தலைமையிலான இந்த கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. திமுக தலைமையிலான கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி.

பதினைந்து ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு வகித்த திமுக தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால் திமுக- காங்கிரஸ் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களையும், ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களையும் படுகொலை செய்ய துணை போனது.

கடந்த தேர்தலில் திருமாவளவன் மற்றும் வைகோ, விஜயகாந்தின் அரசியலை முடித்து வைத்தனர். இந்த முறை ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்து விடுவார்கள்" என்றார்.

இக்கூட்டத்தில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான கலைச்செல்வன், மாநில எம்ஜிஆர் துணைச் செயலாளார் சோழன் சம்சுதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கேப்டன் காமராஜ், மாவட்ட பாசறை செயலாளர் தியாக.ரத்தினராஜன், மாவட்ட ஒட்டுனர் செயலாளர் வேப்பூர் காமராஜ், விருதாச்சலம் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், வீரபாண்டியன், நகர செயலாளர் மார்கட் நடராஜன், மகளிர் அணி விஜய ஜோதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details