தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூதாட்டியின் பசி தீர்த்த காவலர் - வைரல் வீடியோ - Tropic police feeding on old lady hunger near Panruti

கடலூர் : போக்குவரத்துக் காவலர் ஒருவர் பசியுடன் இருந்த மூதாட்டிக்காக உணவளித்த போது அவர் காவலரின் காலில் விழ முயன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

போக்குவரத்து காவலர் ராஜதீபன்

By

Published : Oct 6, 2019, 11:13 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார் ராஜதீபன். கடந்த சில தினங்களுக்கு முன்பு சைக்கிளில் சென்ற சிறுவனை லாரி ஒன்று மோத முயன்றபோது நூலிழை வித்தியாசத்தில் அந்த சிறுவனை இவர் காப்பாற்றினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் இவர் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றார்.

பண்ருட்டி அருகே மூதாட்டியின் பசிக்கு உணவளித்த டிராபிக் போலிஸ்

இந்நிலையில் போக்குவரத்துக் காவலர் ராஜதீபன் பண்ருட்டி அருகே சாலையில் பசியுடன் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவருக்கு உணவளித்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட மூதாட்டி, இவரின் காலில் விழ முயன்றபோது அதனை தடுத்து ராஜதீபன் மூதாட்டியின் ஆசி பெற்றார். பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் போக்குவரத்து காவலர் ராஜதீபனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ABOUT THE AUTHOR

...view details