கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டு, தற்போது கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ன.
ஊதியம் வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்! - தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கடலூர்: மே மாதம் வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள், போக்குவரத்து பணி மனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Transport workers struggle for pay
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மண்டலப் போக்குவரத்து பணி மனையில், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள், மே மாதம் முழுமைக்கும் ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.