கடலூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவை, மக்களவை கூட்டத் தொடரிலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்வது மக்கள் விரோதமானது.
தேர்தல் நெருங்கிவருவதால் மு.க. ஸ்டாலின், எம்ஜிஆர் குறித்துப் பேசிவருகிறார். இது அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது.
கந்தசஷ்டி கவசம், முகமது நபிகள் குறித்து அவதூறு பேசி பிரிவினையை ஏற்படுத்துவோருக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். என்.எல்.சி.யில் பல்வேறு பணிகளுக்கான நேர்முகத் தேர்விற்கு 1,528 பேர் அழைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இரண்டு பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது, தமிழ்நாட்டினர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் கருத வேண்டியுள்ளது.