கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாள் நல்லூர் புதுக் காலனியைச் சேர்ந்தவர்கள் சிவகண்டன் (22), சந்துரு (19), அஜித் (19). இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர் ஊர் திரும்புவதற்காக சாலையை கடக்கும்போது பண்ருட்டியில் இருந்து வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சிவகண்டன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அஜித், சந்துரு இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவரின் நிலைமை மோசமானதை அறிந்த மருத்துவர்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.