கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஏ.புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கலின் போது கன்னி திருவிழா தொடங்கி 13 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் கன்னிதிருவிழா காணும் பொங்கலன்று தொடங்கியது. இதில், அதே ஊரை சேர்ந்த ஏழு கன்னிப்பெண்கள் கன்னி ஆடி வந்தனர்.
விழா 13 ஆவது நாளான இன்று(ஜன.26) பிற்பகலில் கன்னி திருவிழா நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, கன்னியாடிய ஏழு கன்னி பெண்களை அதே பகுதியில் உள்ள சித்தேரிக்கு அழைத்துச் சென்று கன்னி விடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, ஏரியில் தண்ணீரில் சாமியாடி இறங்கிய பெண்களில் நந்தினி (17), புவனேஸ்வரி (19), வினோதினி (18) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.