தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் தகராறில் இளைஞர் கொலை: மூவர் மீது பாய்ந்தது குண்டாஸ்!! - Three Persons Arrested For Goondas Act In Cuddalore

கடலூர்: பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறை டிக்-டாக்கில் காணொலியாக வெளிட்ட இளைஞரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் தடுப்புச் சட்டம்  கடலூரில் குண்டர் சட்டத்தில் மூவர் கைது  காகாதல் தகராறில் இளைஞர் கொலை  Three Persons Arrested For Goondas Act In Cuddalore  Goondas Act
Goondas Act

By

Published : May 18, 2020, 12:36 PM IST

கடலூர் மாவட்டம், முதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோகன் சிங் வீதியில் உள்ள ஒரு பெண்ணை காதலிப்பதில் இரு தரப்பினரிடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் காதல் கூற சென்றபோது இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.

இதை சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஜிங்கி (எ) ஜெய்வின் ஜோசப் செல்போனில் காணொலியாக பதிவு செய்து டிக் டாக்கில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 4 ஆம் தேதி ஜெய்வின் ஜோசப்பை குடிகாடு உப்பனாற்று பகுதியில் கொலை செய்து புதைத்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய பிரபா (எ) பிரபாகரன் (27), விஜய் (21), ஆசை (எ) மணியரசன் (25) ஆகியோரை கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் பால்சுதர் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் மூவரும் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:மனைவியின் தங்கை கர்ப்பம்: கணவர் மீது பாய்ந்தது போக்சோ!!

ABOUT THE AUTHOR

...view details