தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்று வெள்ளத்தில் சிக்கி அக்கா, தம்பி உள்பட மூவர் உயிரிழப்பு

தென்பெண்ணை ஆற்றில் குடும்பத்துடன் குளிக்கச் சென்ற அக்கா, தம்பி உள்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று பேர் உயிரிழப்பு
மூன்று பேர் உயிரிழப்பு

By

Published : Nov 15, 2021, 11:26 AM IST

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அருகேயுள்ள முள்ளிகிராம்பட்டு பகுதியைச் சேர்ந்த லோகேஷ்வரன், அவரது உறவினர் நாகராஜ் மகன் மாதவன், சகோதரி மாளவிகா உள்ளிட்ட குடும்பத்தினருடன் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தைப் பார்க்கச் சென்றார்.

அப்போது நீரில் இறங்கி அவர்கள் விளையாடி செல்ஃபி, காணொலி எடுத்து மகிழ்ந்தபோது திடீரென லோகேஸ்வரன் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த மாளவிகாவும், மாதவனும் ஆற்றில் குதித்து லோகேஸ்வரனைக் காப்பாற்ற முயன்றனர்.

இருப்பினும் எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனே அவரது உறவினர்கள் நெல்லிக்குப்பம் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், படகுகள் மூலம் காணாமல்போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று (நவம்பர் 15) காலை மாதவனின் உடல் கிடைத்தது. பின்னர் மூன்று பேரின் உடல்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் இதேபோன்று கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அம்பத்தூர் நீதிமன்றத்தில் காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details