தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Watch Video: பேருந்தை உடைத்து ஓட்டுநர்,நடத்துநரைத் தாக்கிப் பணம் கொள்ளை - கடலூர் பேருந்து விவகாரம்

கடலூரில் தனியார் பேருந்தை மறித்து அரிவாளால் பேருந்தின் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநர், நடத்துநரை தாக்கி பணத்தைப் பறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

bus driver assaulted at cuddalore
பேருந்தை உடைத்து ஓட்டுனரைத் தாக்கி பணம் கொள்ளை

By

Published : Dec 1, 2021, 8:10 PM IST

கடலுார்:பெரியகாட்டுப்பாளையம் என்ற இடத்தில் கடலூரிலிருந்து புதுச்சேரி சென்ற தனியார் பேருந்தை, பதிவெண் இல்லாத இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வழிமறித்து பேருந்தின் கண்ணாடியை அரிவாளால் உடைத்து ஓட்டுநரை வெட்டினர்.

இதனைத் தடுக்க வந்த பேருந்து நடத்துநரின் கழுத்தில் அரிவாளை வைத்து, மிரட்டி பணப்பையில் இருந்த ரூபாய் 1200 பணத்தை கொள்ளையடித்து தப்பி விட்டனர்.

பேருந்தை உடைத்து ஓட்டுனரைத் தாக்கி பணம் கொள்ளை
பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஓட்டுநர் தேசிங்கு அளித்தப் புகாரின் அடிப்படையில், பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரித்விராஜன், சீனிவாசன், மருதுநாயகம் ஆகிய 3 பேரையும் ரெட்டிச்சாவடி காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய அரிவாள், இரு சக்கர வாகனங்களுடன் அவர்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:Watch Video: ரயிலுடன் ரன்னிங் ரேஸ் - மாணவியின் விபரீத விளையாட்டு

ABOUT THE AUTHOR

...view details