தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புளியமரத்தில் கார் மோதி விபத்து- மூவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம் - விபத்தில் மூவர் உயிரிழப்பு

கடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்தனர்.

Three killed in road accident Two injured!
Three killed in road accident Two injured!

By

Published : Jul 29, 2020, 1:51 AM IST

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த இளங்கோ, செந்தில், தட்சிணாமூர்த்தி, சண்முகம், கோதண்டம் ஆகியோர் காரில் சொந்த வேலையாகப் புதுச்சேரிக்குச் சென்றுள்ளனர். பின்னர் அங்கு வேலையை முடித்த அவர்கள், மது அருந்திவிட்டு மீண்டும் குறிஞ்சிப்பாடிக்கு தியிரும்பியுள்ளனர்.

இதையடுத்து தோப்புக்கொல்லை என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இளங்கோ, செந்தில், தட்சிணாமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சண்முகம், கோதண்டம் ஆகிய இருவர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details