அண்ணா விளையாட்டு மைதானத்தில் நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால், காலை வழக்கம்போல் சிறுவர்கள் நீச்சல் பயிற்சி மற்றும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போதுகடலூர் மஞ்சக்குப்பத்தைசேர்ந்த பலராமன்(13), குகன்(12), அபினேஷ்(13) ஆகிய மூன்று சிறுவர்களுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு அலறி அடித்து கத்தினர்.
நீச்சல் குளத்தில் குளித்த மூன்று சிறுவர்களுக்கு திடீர் மூச்சுத்திணறல்! - நீச்சல் குளம்
கடலூர்: அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்ட மூன்று குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை பார்த்த நீச்சல் பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.சிறுவர்களை உடனடியாக மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நீச்சல் குளத்தில் குளோரின் அதிகமாக கலந்ததால் இந்த மூச்சு திணறல் ஏற்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பேரில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.