கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவன தொழிலாளியாக இருப்பவர் சண்முகம் (54) மனைவி ஷகிலா(48). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என என்எல்சியில் ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதில் ஒரு மகள் திருமணம் முடிந்த நிலையில், இரண்டாவது மகள் மற்றும் மகன் வெளியூரில் தங்கி படித்து வருகின்றனர்.
இதனிடையே சண்முகம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேநேரம், தனது முறை தவறிய காதலையும் கைவிடுவதற்கு சண்முகம் மறுத்துள்ளார்.
இதன் காரணமாக நாளுக்கு நாள் சண்டை அதிகரித்ததால், ஆத்திரம் அடைந்த ஷகிலா கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தனது இளைய மகள் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ் வளவன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். எனவே அடிக்கடி தனது மகளை வீட்டிற்கே வந்து பார்க்கும் தமிழ் வளவனிடம், “எனது இரண்டாவது மகளை உனக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன்.
என்னுடைய கணவர் உயிரிழந்துவிட்டால் என்எல்சியில் இருந்து பணம் வரும். அதையும் உனக்கு கொடுத்து விடுகிறேன்” என கூறி ஷகிலா நேற்று முன்தினம் இரவு தமிழ் வளவனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் இணைந்து சண்முகத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.