தைத் திங்கள் ஐந்தாம் நாள் கடலூர் தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கடலூர், முதுநகர், புதுநகர், தாழங்குடா குண்டு, உப்பலவாடி, மஞ்சகுப்பம், பாதிரிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களின் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டன.
இதனையடுத்து இந்த உற்சவ சாமிகள் தென்பெண்ணையாற்றில் புனித தீர்த்த வாரி செய்து, ஆற்றங்கரையில் வரிசையாக நின்றன. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் விழா என்பதால் இதனைக் காண, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது, ஆற்றில் நீராடி தாங்கள் கொண்டு வந்த உணவினை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.