தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

74 கல்லூரிகள் செமஸ்டர் தேர்வு வினாத்தாள் குளறுபடி! - college semester exam

74 கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், கூடுதல் கால அவகாசம் கொடுத்து மற்றொரு வினாத்தாள் கொடுக்கப்பட்டு, தேர்வு நடைபெற்றது.

74 கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வின் வினாத்தாள் குளறுபடி!
74 கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வின் வினாத்தாள் குளறுபடி!

By

Published : Jul 14, 2022, 3:30 PM IST

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 74 கலைக்கல்லூரிகள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில தினங்களாக இரண்டாம் பருவத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று (ஜூலை 13) பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கு இங்கிலீஷ் ப்ரொபஷனல் (English Professional) தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கியது.

அப்போது, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் இரண்டாம் பருவத் தேர்வுக்கான ஒரு கேள்வியும் இடம் பெறாமல், அனைத்தும் முதல் செமஸ்டர் தேர்வில் இடம் பெற்றிருந்த கேள்விகள் மட்டுமே இருந்தது மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் தேர்வு எழுதாமல் 2 மணியிலிருந்து 3.30 மணி வரை மாணவர்கள் காத்திருந்தனர்.

தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரியிலும் இதே குழப்பம் நீடித்த நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளருக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் புதிய வினாத்தாள் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டது. பின்னர் ஒவ்வொரு கல்லூரியும் அதை பதிவிறக்கம் செய்து, நகலெடுத்து மாணவர்களுக்கு தேர்வு எழுத கொடுக்கப்பட்டது.

இதனால் கூடுதல் அவகாசம் கொடுத்து தேர்வு எழுத பல்கலைக்கழக பதிவாளர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:வேளாண் கழிவுகளிலிருந்து பயோ எத்தனால்: சென்னை ஐஐடி ஆராய்ச்சி

ABOUT THE AUTHOR

...view details