தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு: காவல் துறையிடம் பொதுமக்கள் வாக்குவாதம் - Cuddalore Government Hospital

கடலூர்: தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசித் தட்டுப்பாடு காரணமாக, காவல் துறையிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : காவல்துறையிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : காவல்துறையிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

By

Published : May 17, 2021, 6:15 PM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதேபோன்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 40 நாட்கள் கடந்தும்; இரண்டாவது தவணை தடுப்பூசி போதிய கை இருப்பும் இல்லாததால் பொதுமக்களை ஒவ்வொரு நாளும் திருப்பி அனுப்பி வரும் நிலை ஏற்பட்டு வருகின்றது.

கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசித் தட்டுப்பாடு காவல் துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

பலரும் 50 நாட்கள் கடந்த நிலையிலும் தினந்தோறும் அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி இல்லாமல் திரும்பி அனுப்பப்படுவதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் இன்று 200க்கும் மேற்பட்டோர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 80 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்ட நிலையில், மீதமிருப்போரை தடுப்பூசி இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தடுப்பூசிக்காக, இங்கு பலமுறை வந்து செல்வதாகவும்; தங்களுக்கு தடுப்பூசி போடாமல் அலைக்கழித்து வருவது கண்டிக்கத்தக்கது எனவும் காவல் துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:கடலூரில் மருத்துவமனை அமைத்துத்தர வேண்டும்: என்எல்சியிடம் அமைச்சர் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details