தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி மருத்துவர்களிடம் சிகிச்சை... கரோனா உயிரிழப்பு அதிகரிப்பு - வேளாண் துறை அமைச்சர் - போலி மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றதால்தான் கரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது

கடலூர்: கிராமங்களில் மக்கள் போலி மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றுக்கொண்டதால் தான் கரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

By

Published : Jun 15, 2021, 11:34 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள், நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டுகளை வழங்கினார்.

பின்னர் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், விதவை மறுவாழ்வுக்கு தையல் எந்திரங்கள், திருக்கோயில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழ்நாடு அரசு அறிவித்தவாறு கரோனா நிவாரணமாக ரூபாய் நான்காயிரம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 14 வகையான நிவாரணப் பொருள்களும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

மக்கள் ஊரடங்கை கடைபிடித்து கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கிராமங்களில் மக்கள் போலி மருத்துவர்கள், மருந்தகங்களில் காய்ச்சல் போன்றவற்றிற்கு மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டு வீட்டிலேயே இருந்ததால்தான் தற்பொழுது கரோனா இறப்பு என்பது அதிகரித்து இருப்பதாகவும் முதலமைச்சரின் பேச்சைக் கேட்டு நாடு இருந்தால் நாடு முன்னேற்றமடையும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்“ என்றார்.

மேலும், தடுப்பூசி என்பது தினந்தோறும்வந்து கொண்டிருப்பதாகவும் தட்டுப்பாடு படிப்படியாகக் குறைந்து அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது தங்கு தடை இல்லாமல் தடுப்பூசிவந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரி இன்னும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் வராததால் நோயாளிகள் மாத்திரை வாங்க சொல்வது நடைமுறையில் உள்ளது. இது பற்றி முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். மருத்துவமனை தமிழ்நாடு அரசின் முழு கட்டுப்பாட்டில் மருத்துவக் கல்லூரி கொண்டுவந்த பின் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details