கடலூர்: கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜிவ் காந்தி சிலை எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து மவுனப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது.
பேரறிவாளனின் விடுதலை நியாயமற்ற செயல் - கே.எஸ். அழகிரி - சிதம்பரம்
பேரறிவாளனின் விடுதலைக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி சிதம்பரத்தில் வாயில் வெள்ளைத் துணி கட்டி மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேரறிவாளன் விடுதலை நியாயமற்ற செயல்
ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் தங்கள் வாயில் வெள்ளை துணியைக் கட்டி மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: என் மகளின் சாவில் சந்தேகம் - கல்லூரி நிர்வாகத்தின் மீது பெற்றோர் புகார்