தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யோகாசனம் மூலம் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்ட சிறுமி! - கடலூர் அண்மைச் செய்திகள்

விருத்தாச்சலத்தில் யோகாசனம் மூலமாக கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்ட சிறுமியின் செயல், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

யோகாசனத்திலேயே கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்ட சிறுமி தொடர்பான காணொலி
யோகாசனத்திலேயே கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்ட சிறுமி தொடர்பான காணொலி

By

Published : Aug 7, 2021, 9:28 PM IST

கடலூர்:விருத்தாச்சலத்தில் காய்கறிக் கடை நடத்தி வருபவர் பிரபு. இவரது மகள் சஞ்சனா (9). இவர் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று (ஆக.07) முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி சிறுமி சஞ்சனா, யோகாசனம் மூலமாக கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். இது பொது மக்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ், ஸ்டாலின் விருத்தாச்சலத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

யோகாசனத்திலேயே கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்ட சிறுமி குறித்த காணொலி

அப்போது விருத்தாச்சலத்தை மாவட்டமாக மாற்றுதல், பள்ளி, கல்லூரிகள் அமைத்துக் கொடுத்தல், அரசு பொது மருத்துவமனையை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை சிறுமி சஞ்சனா முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீரஜ் சோப்ரா தங்கம்: இந்தியா புதிய சாதனை

ABOUT THE AUTHOR

...view details