தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதித் தேர்வு

கடலூரில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு இன்று (ஜூலை 26) தொடங்கியது.

By

Published : Jul 26, 2021, 2:45 PM IST

கடலூரில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு
கடலூரில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு

கடலூர்: தமிழ்நாடு முழுவதும் 11ஆயிரத்து, 813 காலியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் மூலம் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது.

கரோனா பரவல் காரணமாக ஏற்கனவே நடைபெறவிருந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்வுகளை நடத்த அரசு உத்தரவிட்டது.

உடல் தகுதித் தேர்வு

அதன்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (ஜூலை 26) காலை தொடங்கியது.

கடலூரில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதித் தேர்வு

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 28ஆயிரத்து, 640 தேர்வாளர்கள் தேர்வு எழுதினர். இதில் மூன்றாயிரத்து, 794 பேர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களில் கடலூர் மாவட்டத்தில் இரண்டாயிரத்து, 808 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்பதாயிரத்து, 86 பேரும் என மொத்தம் மூன்றாயிரத்து, 794 பேர் இந்த உடல் தகுதித் தேர்வில் கலந்துகொள்கிறார்கள்.

பாதுகாப்பு பணி

முதல் நாளான இன்று 500 பேர, தகுந்த இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு முதலில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் உயரம், மார்பளவு சரிபார்க்கப்பட்ட பின்பு, ஏழு நிமிடம் ஓட்டப் பயிற்சியில் பங்கேற்று அதில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இங்கு நடைபெற்றுவரும் பணிகளை தமிழ்நாடு ஆயுதப்படை காவல் துறை துணைத்தலைவர் எழிலரசன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் ஆகியோர் உடல் தகுதித் தேர்வை பார்வையிட்டனர்.

இந்த உடல் தகுதித் தேர்வு காரணமாக அண்ணா விளையாட்டு அரங்கம் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'சேலத்தில் காவலர் தகுதித் தேர்வு'

ABOUT THE AUTHOR

...view details