கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான புதிய வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 18 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ரத்தமாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லை. பாதுகாப்பான உடைகள் இல்லை எனக்கூறி பணி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம் சிறப்பு சிகிச்சை வார்டுக்கு சென்று செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.