தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போராட்டகாரர்கள் ரத்த தானம் செய்தபோது முகாம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ரத்த தான முகாமிற்கு சென்று ரத்தம் கொடுத்த போது, முகாம் பாதியில் நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிழவியது.

The camp was stopped due to the protesters' bloodshed!
The camp was stopped due to the protesters' bloodshed!

By

Published : Mar 3, 2020, 8:25 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அனைத்துக் கட்சி கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டம் நேற்று 11-வது நாளாக நீடித்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், காட்டுமன்னார்கோவிலில் தனியார் அமைப்பு சார்பில் நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது. இதுபற்றி அறிந்த போராட்டக்காரர்கள் ரத்த தானம் செய்வது என்று முடிவெடுத்து முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்றுள்ளனர். பின் அவர்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வருதாகவும், எனவே நாங்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு வந்து ரத்தம் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மருவத்துவர்கள் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து ரத்த தானம் பெற இயலாது என தெரிவித்ததையடுத்து, போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் முகாம் நடந்த இடத்திற்கு ரத்தம் வழங்க சென்றனர். பின் அவர்களிடமிருந்து ரத்த தானம் பெறுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது, மருத்துவ குழுவினருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. அதில், தற்போது நடைபெறும் ரத்த தான முகாமை வேறு ஒரு நாளில் நடத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அங்கு யாரிடமும் ரத்தம் பெறாமல், ரத்த தான முகாம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள், “ எங்கள் போராட்டத்தை கைவிட வைக்க வேண்டும் என்பதற்காகதான் ரத்த தான முகாமை நிறுத்தி விட்டனர்” என்று தெரிவித்து விட்டு, அங்கிருந்து தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிக்கு சென்றனர்.

இதையும் படிங்க:இந்து அமைப்பினர் போராட்டங்களுக்கு கண்டனம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் மனு

ABOUT THE AUTHOR

...view details