தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம்: இரு தரப்பு மோதலில் 10 பேர் படுகாயம்!

கடலூர்: விருத்தாச்சலம் அருகே தர்மநல்லூர் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட விரோதம் காரணமாக தற்போது இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தர்மநல்லூர் உள்ளாட்சித் தேர்தல்  தர்மநல்லூர் சண்டை  தர்மநல்லூர் பிரச்சனை  தர்மநல்லூர் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சனை  cuddalore news  cuddalore Tharmanallur fight  Tharmanallur fight  தர்மநல்லூர்
உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம்: இரு தரப்பு மோதலில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

By

Published : May 19, 2020, 3:12 PM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தர்மநல்லூர் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே கடும் மோதல் இன்று காலை நடைபெற்றது. அதன் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தர்மநல்லூரில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலின்போது தர்ம நல்லூரில் போட்டியிட்ட ராஜேஸ்வரி தரப்பினருக்கும், அம்சயாழ் தரப்பினருக்கும் இடையே சில உரசல்கள் இருந்து வந்துள்ளது. தேர்தலில், ராஜேஸ்வரி என்பவருக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்ததால் அவர் வெற்றி பெற்றார்.

இதில் ஆத்திரமடைந்த அம்சயாழின் ஆதரவாளர்கள், ராஜேஸ்வரி ஆதரவாளர்கள் மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இம்மோதலில், இரு தரப்பைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தர்மநல்லூர் கிராமத்தில் இருதரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதல்

இச்சம்பவம் நடைபெற்ற வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிறந்தநாள் பரிசாக முத்தம் கொடுத்த செயல் அலுவலர் - பணியிடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details