தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: கடலூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் - கடலூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

கடலூர்: தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 33 பேரை கடலூர் போலீசார் கைது செய்தனர்.

terrorist checking in cuddalore

By

Published : Aug 23, 2019, 7:44 PM IST

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஆறு பேர், இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆய்வாளர்களும் சுங்கச்சாவடிகளில் சோதனையிடுமாறு காவல்துறை இயக்குநர் திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனடிப்படையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கடலோர காவல்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் புதுவை எல்லையான ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

கடலூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

மேலும், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல குற்றச் செயல்களில் தொடர்புடைய 33 பேரை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details