தமிழ்நாடு

tamil nadu

ஆசிரியரைச் சீண்டிய மாணவர்கள் தந்த புகார்; கைதான ஆசிரியர் - சக ஆசிரியர்கள் போராட்டம்!

By

Published : Oct 4, 2019, 5:35 PM IST

கடலூர் : இலவச மடிக்கணினி கேட்டு வந்த முன்னாள் மாணவனை உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இதனால் அவரை விடுதலை செய்யக்கோரி சக ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசிரியர்கள் தொடர் போராட்டம்


கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு உதவி பெறும் தனியார்ப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2017-2018ஆம் ஆண்டு கடலூர் மஞ்சக்குப்பத்தில் தனியார் பள்ளியில் படித்த, மாணவர்கள் 5 பேர் அரசு வழங்கக்கூடிய மடிக்கணினியை பள்ளிக்கு சென்று முதல்வரிடம் கேட்டுள்ளனர். இதற்கு முதல்வர் மடிக்கணினி 2017-18ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வரவில்லை என்றும் அரசு வழங்கக்கோரி உத்தரவிட்டால் வழங்குவதாகவும் கூறி அனுப்பியுள்ளார்.


பின்னர் பள்ளி வளாகத்தில் சுற்றிய 5 மாணவர்கள் சத்தமிட்டும், கூச்சலிட்டும் சென்றுள்ளனர். இதனை அங்கு பணியில் இருந்த உடற்பயிற்சி ஆசிரியர் சந்திரமோகன் வெளியே போய் சத்தமிட்டு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியரைப் பார்த்துத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உடற்பயிற்சி ஆசிரியர் பள்ளியை விட்டு வெளியே போகச் சொல்லி மாணவனைத் தாக்கியுள்ளார்.

இதனை மாணவர்கள் தங்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்து, கடலூர் புதுநகர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் ஆசிரியரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அவரை விடுதலை செய்யக்கோரி சக ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் தொடர் போராட்டம்

ஆசிரியர் கைதைக் கண்டித்து பள்ளியில் உள்ள சக ஆசிரியர்கள் அவரை விடுதலை செய்யக் கோரியும், பள்ளியில் ஆசிரியர்கள் பணிபாதுகாப்புக் கோரியும், பள்ளிக்குச் சம்பந்தம் இல்லாத, தொந்தரவு கொடுக்கும் வகையில் செயல்பட்ட மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பள்ளி நிர்வாகம் சார்பில் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையும் படிங்க : புதிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை கிழித்தெறிந்து போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details