கடலூர்:சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவேளிசாவடி என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கண்ணகி என்ற ஆசிரியை ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை சரமாரியாக மூங்கில் குச்சியால் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
1ஆம் வகுப்பு மாணவனை மூங்கில் குச்சியால் கடுமையாக தாக்கும் ஆசிரியை!
சிதம்பரம் அருகே 1ஆம் வகுப்பு மாணவனை மூங்கில் குச்சியால் கடுமையாகத் தாக்கும் ஆசிரியையின் வீடியோ வெளியாகி கடும் கண்டத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்த வீடியோவில் ஆசிரியை கண்ணகி மாணவனை சரமாரியாக அடிப்பதும், இழிவான சொற்களால் திட்டுவதுமாக உள்ளது. எனவே, மாணவர்களிடம் கண்மூடித்தனமாக நடந்து கொள்ளும் ஆசிரியை மீது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஆசிரியையின் இந்த கொடூர செயலால், பல மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும் பெற்றோர் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:நான்காம் வகுப்பு மாணவனை மண்வெட்டியால் அடித்து கொன்ற ஆசிரியர்