தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடுமுறை நாளிலும் மதுபானம் விற்பனை! - tasmac sales in kadallur

கடலூர்: குள்ளஞ்சாவடி அருகே வள்ளலார் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், போலீஸ் கண்முன்னே மதுபான விற்பனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம்: குள்ளஞ்சாவடி அருகே வள்ளலார் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் கண்முன்னே மதுபான விற்பனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம்: குள்ளஞ்சாவடி அருகே வள்ளலார் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் கண்முன்னே மதுபான விற்பனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By

Published : Feb 8, 2020, 4:25 PM IST

கடலூர் மாவட்டத்தில் உள்ள குள்ளஞ்சாவடி அருகே வடலூர் பகுதியில் இன்று வள்ளலார் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்திரம் கிராமத்தில் உள்ள மதுபான கடையில் காவல் துறை பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விடுமுறை நாள் மதுபானம் விற்பனை செய்யப்படும் காட்சி

இதுகுறித்து பொதுமக்கள் மதுபான விற்பனையாளரிடம் போய் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடை மூடப்பட்டது. சத்திரம் கிராமத்தில் 24 மணி நேரமும் இந்த கடையில் விற்பனை நடைபெறுவதாகவும் மேலும் போலி மதுபானங்களும் இந்த சுற்றுவட்டாரத்தில் விற்கப்படுவதாகவும் இதை காவல் துறையினர் கண்டுகொள்வதே இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விடுமுறை தினத்தில்கூட மதுபானங்கள் விற்பனை செய்தது அந்த பகுதியில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:புழல் சிறையிலிருந்து டாஸ்மாக் ஊழியரை மிரட்டிய கைதி

ABOUT THE AUTHOR

...view details