மத்திய தொழில்நுட்பத்துறை துணைச் செயலர் ராஜேந்திர ரத்னோ, தமிழ்நாட்டின் மத்திய கரோனா ஆய்வுக்குழு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மிகக் குறைவு - கரோனா செய்திகள்
தேசிய அளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் உயிரிழப்பு மிகக் குறைவு என மத்திய தொழில்நுட்பத்துறை துணைச் செயலர் ராஜேந்திர ரத்னோ தெரிவித்துள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய கரோனா ஆய்வுக்குழு குறை சொல்வதற்காகவோ நடவடிக்கை எடுப்பதற்காகவோ கிடையாது. தேசிய அளவில் சுகாதாரத்துறை மற்றும் அனைத்து துறையினருடன் இணைந்து தேவைப்படும் பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவாகும். தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏழு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். மேலும் தேசிய அளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் மிகக் குறைவு எனத் தெரிவித்தார்.
அதைத்தொடரந்து அவர், கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கரோனா வைரஸ், முதலில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களாலும், கோயம்பேடு சந்தைக்கு சென்றுவந்தவர்களாலும் பரவியுள்ளது. அதையடுத்து வைரஸ் பரவலை சுகாதாரத்துறை மற்றும் அனைத்து துறையினரும் மிகக் கடினமாக உழைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக, நோய்த் தொற்றையும் கட்டுப்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற மிகப்பெரிய சவாலை அரசு சந்தித்து வருகிறது எனத் தெரிவித்தார்.