கடலூரில் பாஜக பிரமுகரின் இல்ல சுப நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காஷ்மீர் பிரச்னையில் திமுகவின் நிலைப்பாட்டை எதிர்க்கிறேன். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்திய அரசியலில் இருந்து தனிமைப்படுத்தப்படும். விசிக தலைவர் திருமாவளவன் காஷ்மீர் மக்களிடம் ஏன் வாக்கெடுப்பு நடத்தவில்லை என்று கேட்கிறார்.
‘விவசாயிகளுக்காகவே பால் விலை உயர்வு’ - தமிழிசை
கடலூர்: பால் உற்பத்தியால் பயனடையும் விவசாயிகளுக்கு உதவுவதற்காகவே பால் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு அதிகாரம் இருப்பதனால் அது காஷ்மீரிகளுக்கு சொந்தமான நிலம் அல்ல. அது இந்தியாவின் ஒரு பகுதிதான். இதில் வைகோ 100ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் போது காஷ்மீர் நம்முடன் இருக்காது என்று சொல்கிறார். இவரைப் போன்ற வக்கிர புத்தி வேறு எந்த தலைவருக்காவது இருக்குமா?’ என்றார்.
மேலும், ஆவின் பால் விலையேற்றம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘பால் முகவர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் பால் விலையை உயர்த்திதான் ஆக வேண்டும். நான்கரை லட்சம் விவசாயிகள் பால் உற்பத்தியால் பயனடைகிறார்கள். அவர்களுக்கு அரசு உதவ முடிவெடுத்திருக்கிறது. பால் விலையை ஒரே அடியாக உயர்த்தமால் படிப்படியாக உயர்த்தியிருக்கலாம்’ என்று பதிலளித்தார்.