தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது - வன்கொடுமை தடுப்புச் சட்டம்

சிதம்பரத்தில் பள்ளி மாணவரை காலால் எட்டி உதைத்து தாக்கிய ஆசிரியர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆ12ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது
12ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

By

Published : Oct 15, 2021, 8:10 PM IST

Updated : Oct 15, 2021, 10:36 PM IST

கடலூர்: சிதம்பரம் நந்தனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்.13ஆம் தேதி இயற்பியல் ஆசிரியர் சுப்ரமணியம் பள்ளி மாணவர்களை தலைமுடியைப் பிடித்து, காலால் எட்டி உதைத்து, தரையில் மண்டியிடச் செய்து உதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இச்சம்பவத்தில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்த நிலையில், மாணவரை தாக்கிய ஆசிரியர் சுப்பிரமணியத்தை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், ஆசிரியர் பாலசுப்பிரமணியம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிதம்பரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:மாணவனை காலால் உதைத்து தாக்கிய ஆசிரியர்: வைரலாகும் காணொலி

Last Updated : Oct 15, 2021, 10:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details