தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

50,000 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

கடலூர்: பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர்
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர்

By

Published : Feb 12, 2021, 11:31 AM IST

கடலூரில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் தாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பள்ளிக் கல்வித் துறையில் 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட15 கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றுகட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, கடந்த 1ஆம் தேதி முதற்கட்டமாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன. எனினும் கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இதனால் இரண்டாம்கட்ட போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளோம்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர்

அப்போதும் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மூன்றாம்கட்டமாக சென்னை கோட்டையை நோக்கிப் பேரணி நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 2,098 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details