தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் வீட்டின் முன் அண்ணாமலை போராட்டம் நடத்த வேண்டும் - கே.எஸ். அழகிரி - கடலூர் மாவட்ட செய்திகள்

மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி வீட்டின் முன் போராட்டம் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ். அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி

By

Published : Aug 9, 2021, 8:14 AM IST

Updated : Aug 9, 2021, 9:57 AM IST

கடலூர்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா சிதம்பரத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியில் இணைய வந்த அனைவருக்கும் மாநிலத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

கே.எஸ். அழகிரி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதி பாதிக்கப்படும். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் டெல்லியில் பிரதமர் மோடி வீட்டின் முன்போ அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் வீடு முன்போதான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து டெல்டா பகுதியில் போராட்டம் நடத்துவது என்பது மக்களை ஏமாற்றும் வேலை. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாள்களில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்ற முடியுமோ, அத்திட்டங்களை நிறைவேற்றிவருகிறார்.

தற்பொழுது தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை போடப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். இது நல்ல முயற்சி இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, மாநிலச் செயலாளர் சித்தார்த்தன் ரவி, விருத்தாசலம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். ராதா கிருஷ்ணன், கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: நீருக்குள் விஜய் ஓவியம் - கல்லூரி மாணவர் சாதனை

Last Updated : Aug 9, 2021, 9:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details