கடலூர்:சிதம்பரம் நடராஜர் ஆலயம் தீட்சிதர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரணைக்குச்சென்ற அறநிலையத்துறை அலுவலர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனைத்தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகம் குறித்து பொது மக்களும் கோயில் மீது அக்கறை உள்ள நபர்களும் கருத்துத்தெரிவிக்க அறநிலையத்துறை அழைப்பு விடுத்திருந்தது.
நேற்று முன்தினம் (ஜூன்.20) காலை 10 மணி முதல் நேற்று (ஜூன்.21) மாலை 3 மணி வரை இரண்டு நாட்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்களில் மொத்தம் 6,240 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 4,521 மனுக்கள் இ-மெயில் மூலமாகவும், 1,411 மனுக்கள் தனிநபர் மூலமாகவும் பெறப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் - தமிழ் ஆர்வலர்கள் மனு மேலும், 308 மனுக்களை தபால் மூலமாகவும் 63 மனுக்கள் இயக்கங்கள் மூலமாகவும் பெறப்பட்டதாகவும் அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மனுக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அறநிலையத் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ள அலுவலர்கள், அதன்பிறகு அறநிலையத்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழ் ஆர்வலர்கள் பலர் வந்து மனுக்களை அளித்தனர்.
அப்போது அவர்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த கோயில் கொண்டுவரப்பட வேண்டுமென மனு அளித்திருப்பதாகவும் சிதம்பரம் நடராஜர் கோயில் ஒரு சந்தேகத்திற்குரிய கோயிலாகத் திகழும் நிலையில் அதற்கு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர்கள் மீது குவியும் புகார் - 4 பேர் மீது வழக்குப்பதிவு