விருத்தாசலம் அருகே இறையூர், ஏ.சித்தூர் ஆகிய கிராமங்களில் இரண்டு தனியார் சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்தது. இந்த ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு கோடி கணக்கில் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆலை நலிவடைந்தாகக் கூறி மூடப்பட்டது. மத்திய அரசின் திவால் சட்டத்தின்படி சர்க்கரை ஆலைக்கு கரும்பு கொடுத்த விவசாயிகள் இயங்குமுறை கடனாளியாக கருத்தப்படுகின்றனர், ஆலை நலிவுற்றால் திவால் அதிகாரி நியமிக்கப்படும்போது பாதுகாக்கப்பட்ட கடனாளராக வங்கிகள் கருதப்படுகிறது.
இச்சட்டத்தினால் வங்கி கடன் தொகை அடைந்த பிறகு மீதமுள்ள தொகையே கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையாக கிடைக்கும் என்ற நிலை தற்பொழுது உள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கம்பெனி சட்டத்தில் முன்னுரிமை கடன்தாரர்கள் என திருத்தம் கொண்டுவந்து கரும்பு விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகளின் கவனத்தை கவரும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் பாலக்கரையில் நடந்தது.